ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தியொன்றாம் வருட பள்ளியிறுதி தோழி ஸ்டெல்லாவுடன் அமெரிக்க பயணம் மேற்கொள்ள நேர்ந்தபோது, அந்த பயண வேளைகளில் பேச்சுவாக்கின்போது தோன்றிய ஒரு எண்ணம் பகிர்ந்துகொண்டதை அவளும் ஏற்க நாற்பது வருடம் நிறைவேறும் தருணம் அதை கொண்டாடி, பழைய நட்புகளை புதுக்கவும், நண்பர்களையும் அவர்களது குடும்பங்களையும் தெரிந்துகொள்ளவும், எமது ஆசிரிய பெருந்தகைகளை கௌரவிக்கவும், இறந்தவர்களுக்கு நண்பர்கள் ஓன்று சேர்ந்து அஞ்சலி செலுத்தவும் இது அருமையான ஒரு சந்தர்ப்பமாகும் என்ற எண்ணத்தோடு அன்றிலிருந்தே இதை செயல்முறைப்படுத்த துணிந்துவிட்டோம். இதைப்பற்றி கேட்ட நண்பர்கள் ஒவ்வொருவரும் ஆமோதிக்க இவ்வருடம் கிறிஸ்துமஸ்-புதுவருட விடுமுறையின்போது ஒரு ஆலோசனைக்கூட்டம் சேரவும், அதன்பிறகு வரும் வருடம் மார்ச் மாதம் கொண்டாட்டம் நடத்தவும் எண்ணுகின்றோம்.
தோழர்களுடன் என்பதுபோல் ஆசிரியர்களிடமும் இதை சொன்னபோது ஆர்வமுடன் வரவேற்றார்கள். எனவே தொலைபேசி எண்களும், விலாசமும் வாங்க அல்போன்சம்மாவை கேட்டுக்கொண்டேன். அப்பணி தொடர்கிறது...
இதன் தொடர்ச்சியாக டிசம்பர் மாதம் இருபத்திஎட்டாம் நாள் ஊரிலும் பக்கத்து ஊர்களிலுமுள்ள நண்பர்கள் பத்துபேர் ஒன்றுகூடினோம் [அன்றைய படம் ஒன்றும் அனுப்புகிறோம்]. அன்று அனைவருக்கும் வசதியான நாள், நமக்கு ஒன்றுசேர சிறந்த நாள் என உயிர்ப்புக்கு மறுநாள், அதாவது ஏப்ரல் மாதம் இருபத்தியைந்தாம் நாளை தேர்ந்தெடுத்தோம். இது உங்களுக்கும் ஏற்புடையதே என எண்ணுகிறோம். அதன் அடிப்படையில் தேவையான ஏற்பாடுகளையும் செய்கிறோம்.
எனவே ஏப்ரில் மாதம் இருபத்தியைந்தாம் நாள் திங்கள்கிழமை ஒன்றுசேர்வோம். வரும்போது குடும்பத்துடன் சேர்ந்து வரவேண்டும் எனவும் அனைவரும் விரும்புகிறோம். நாம் ஒருவரையொருவர் தெரிந்துகொள்வதுடன் குடும்பங்களையும் தெரிந்துகொள்வது நல்லதே. அவர்களும் வரும்போது நமது கூட்டம் குதூகலமாகும். நமது ஆசிரிய பெருந்தகைகளும் நமது குடும்பங்களை பார்க்க நிச்சயம் விரும்புவார்கள், அதில் பெருமையடைவார்கள்.
எனவே, ஏப்ரல் மாதம் இருபத்தியைந்தாம் நாளை மறக்கமுடியாத நாளாக்குவோம். அதற்காக உங்களது வருகையை தீர்மானித்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். தேவையான ஏற்பாடுகளை செய்துவைக்க வசதியாக இருக்கும்.
இடம் :பயஸ் பதினொன்று மேல்நிலைப்பள்ளி, தூத்தூர்.
நேரம் : முற்பகல் பதினொன்று.
நிகழ்வான : நமது ஆசிரியர்களை கௌரவித்தல்
அறிமுகம், நலிந்த நட்பை புதுப்பித்தல்...
கலை நிகழ்ச்சிகள்...
விருந்து முதலியன...
நட்புடன்,
பெல்சிட் பிராங்கோ பணி. பங்கிராஸ்.
No comments:
Post a Comment