Friday, April 22, 2011

அந்த நாள் ஞாபகம்...



நாற்பது வருடங்களுக்கு பிறகு, அதாவது ஒரு தலைமுறைக்கு பிறகு, நாம் பயின்ற பள்ளிக்கு, அல்ல பள்ளிவளாகத்துக்கு வந்திருக்கின்றோம்! இனிய பல நினைவுகள் நெஞ்சை தொட்டு தழுவி செல்கின்றதல்லவா... அந்த ஆனந்த குதூகல சுட்டித்தனங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிடத்தான் முடியுமா? அவற்றை நினைவின் திரைக்கு கொண்டுவருவோமே, பழைய நாட்களை அசைபோட்டு ஆனந்தபெருமிதம் கொள்வோமே... அவற்றை பகிர்ந்து இளைமை நிலைக்கு திரும்ப வருவோமே, இனிமை அடைவோமே...

இன்று நாம் ரசிக்கும் சங்கமம் பிறந்த கதை அழைப்பிதழிலேயே படித்திருப்பீர்கள். அதற்க்கு கிடைத்த வரவேற்பே தனி. அதைத்தான் இங்கே பார்க்கிறோம், அனுபவிக்கிறோம்.

பள்ளியல்ல, பள்ளிவளாகம் என்றேன்; ஆம் நாம் பயின்ற பள்ளிக்கூடமும் வகுப்பறைகளும் இன்றில்லை! அனைத்துமே புத்தம் புது அமைப்பென தோன்றும் அளவுக்கு மாறி இருக்கின்றன! இந்த மேம்பாட்டு பணிகளெல்லாம் தொடங்கிவைக்கும் பேறுபெற்றவன் நான், இதே பள்ளியின் தாளாளராக இருந்தவேளையில்...

பள்ளியில் மட்டுமல்ல மாற்றம், நம்மிடமும், நம்மிடையேயும்! திருவாளர்கள் யேசுதாசன் மற்றும் ராமகிருஷ்ணன் தம்பி ஆசிரியர்களின் மறைவு, நமது தோழி லில்லிமேரியின் பிரிவு, (ஜார்ஜ்/ பெஞ்சமின்) என எத்தனையோ இழப்புக்கள்! ஒருசிலரது பிள்ளைகளின் மறைவும் அவர்களது பெற்றோரின் தவிப்பும் இன்றும் நம்மை வேதனைக்குள்ளாக்குகிறது.

No comments:

Post a Comment